ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள சாலைேயாரத்தில் குதிரைகள் உலா வருகின்றன. இதனால் அந்த வழிேய போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் குதிரைகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையில் குதிரைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.