கோவை மேட்டுப்பாளையம் சாலையில் தொப்பம்பட்டி அருகே ஸ்ரீமுருகன் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் அந்த வழியாக செல்லும் தனியார் பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் உள்பட பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து தனியார் பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.