பொதுமக்கள் அவதி

Update: 2026-05-31 10:45 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாராபுரம் சாலையில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. ஒரு சில பஸ்களை தவிர மற்ற அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிலையத்துக்குள் வந்து செல்வதில்லை. இதனால் அரவக்குறிச்சி மேற்கு பகுதியில் வசிப்பவர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் வெளியூர்களுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளப்பட்டி மெயின் சாலைக்கு சென்று பஸ் ஏறி சென்று வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் தாராபுரம் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி