பஸ் இயக்க கோரிக்கை

Update: 2026-05-31 10:45 GMT

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் சமத்துவபுரத்தில் இயங்கிவரும் ஜவுளிப் பூங்காவுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சென்று வரும் நிலையில், காலையில் வேலைக்கு செல்லும் போது அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. மாலையில் குறித்த நேரத்தில் பஸ் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் கூட்டம் காரணமாக பஸ்களில் நின்று கொண்டே பயணம் செய்கின்றனர். எனவே பள்ளப்பட்டியில் இருந்து ஜவுளிப் பூங்காவுக்கு காலையிலும், மாலையிலும் போதுமான பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி