போக்குவரத்து பாதிப்பு

Update: 2026-05-31 10:45 GMT

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் ஜியோ பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும் வகையில் சாலையோரம் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் பேரிகார்டின் மறுபக்கம் சாலையின் நடுவே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்த வருகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் முறையாக பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்