நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில்களுக்கு தினமும் வெளிமாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சிலர் கார் மற்றும் சுற்றுலா வாகனங்களை தேரடி வீதிகளில் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் சார்பில் பணியாளர்களை நியமித்து வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.