ஆம்புலன்ஸ் வசதி வேண்டும்

Update: 2026-04-26 16:34 GMT
தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. ஆனால் இங்கு 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லை. இதனால் இங்கிருந்து நோயாளிகளை மேல்சிகிச்சைக்கு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்