நாமகிரிப்பேட்டை அருகே புதுப்பட்டி-மூலப்பள்ளிப்பட்டி செல்லும் சாலையில் நிழற்கூடம் அமைந்துள்ளது. இந்த நிழற்கூடத்தை 100-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மூலப்பள்ளிப்பட்டி நிழற்கூடத்தில் சில மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மதுபாராக மாறிய நிழற்கூடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.