மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி காட்டுக்கொட்டாய், எம்.தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காகவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அருகிலுள்ள மொரப்பூருக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் காலை, மாலை நேரங்களில் மொரப்பூருக்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லை. எனவே அரூரிலிருந்து எலவடை வரை வந்து செல்லும் அரசு டவுன் பஸ் எண் 2-ஐ வழி நீட்டிப்பு செய்து மேற்கண்ட கிராமங்கள் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.