கடத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நகரம் பல்வேறு கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளது. இந்தநிலையில் அப்பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலில் தினமும் சிக்கி அவதிப்படுகின்றனர். குறிப்பாக தர்மபுரி மெயின் ரோடு, கடத்தூர்-அரூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து மேற்கூரை அமைத்தும், கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்துவதால் அவ்வழியாக பஸ், இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.