இருளில் மூழ்கும் ரெயில்வே மேம்பாலம்

Update: 2026-04-26 13:34 GMT

மொரப்பூரில் உள்ள ரெயில்வே மேம்பாலம் மாநில அரசின் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இரு பக்கவாட்டிலும் பொதுமக்கள், வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மின்விளக்குகள் பழுதடைந்து ரெயில்வே மேம்பாலம் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மேம்பாலத்தில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்