கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர், பெங்களூரு இயக்கப்படும் பஸ்களும், அதே போல பெங்களுருவில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களும் கிருஷ்ணகிரி பஸ் நிலையம் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் போதிய மின் விளக்கு வசதி இல்லை. குறிப்பாக பஸ் நிலைய முகப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக பழுதாகி உள்ளது. அதேபோல உள்ளேயும் பல இடங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் விளக்குகளை பொருத்திடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.