கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதிகளில் சமீப காலமாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகிறது. அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலை நிமித்தமாகவும், அரசு அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அதிகளவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் காற்று ஒலிப்பான்கள் ஒலிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் பதட்டமடைந்து நிலைதடுமாறுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.