சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமமடைந்து வருகின்றது. எனவே இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.