புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வழியாக சேதுபாசத்திரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் கல்லாலங்குடி ஊராட்சி ஆரம்பிக்கும் பகுதியில் கல்லாலங்குடி என வழிகாட்டி பதாகை அரசு சார்பில் நீண்ட காலமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த பெயர் பலகையை மறைத்தவாறு அறிவிப்பு பலகை ஒன்ற வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ஊரின் பெயர் தெரியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஊரின் பெயர் பலகையை மறைத்தவாறு உள்ள அறிவிப்பு பலகையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.