புதுக்கோட்டை நகரப் பகுதியில் புதிய பஸ் நிலையம், கீழ ராஜவீதி, மேலராஜவீதி, பிருந்தாவனம், ஆலங்குடி சாலை, சந்தைப்பேட்டை, உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் இந்த வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்வதினால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.