நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி குமாரபுரம் வழியாக 15 ‘எல்’, 15 ‘டி’, 15 ‘பி’, 15 ‘சி’ ஆகிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சுபாஷ் நகர் பஸ்நிறுத்தத்திற்கு அடுத்து 2 கி.மீ. தூரத்திற்கு பஸ் நிறுத்தம் இல்லை. இந்த இடைப்பட்ட பகுதியில் ரெயில்வே மேம்பாலம், தொழிற்பேட்டை, காற்றாலை நிறுவனங்கள், குடியிருப்புகள், டி.வி.எஸ்.நகர் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால் இடைப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அதிகாலையில் வேலைக்கு செல்லும்போதும், இரவு வீட்டுக்கு திரும்பும்போதும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன்கருதி டி.வி.எஸ்.நகரில் பஸ் நிறுத்தம் அமைத்து செல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாண்சி, ஆரல்வாய்மொழி.