சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்ல கூடிய சாலையில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன. இந்த சாலையில் டிப்பர் லாரிகள் அதி வேகத்தில் செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகிறார்கள். குறிப்பாக குறுகலான சாலையில் கூட ஆபத்தை உணராமல் டிப்பர் லாரிகள் இந்த சாலையில் அதி வேகமாக செல்கின்றன. அதே போல தனியார் நிறுவனங்களுக்கு செல்ல கூடிய வாகனங்களும் இந்த சாலையில் அதிவேகமாக செல்கின்றன. எனவே போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அதி வேகமாக செல்ல கூடிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.