தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முழுவதும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலையாரி தெரு, பழனியப்பன் தெரு, பெரிய தெரு, சின்னையா தெரு, வடசேரி முக்கம் மற்றும் மைனர் பங்களா ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை