கோத்தகிரியில் புதிய குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்களாகியும் இன்னும் பணிகளை தொடங்காமல் உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.