பயணிகளுக்கு இடையூறு

Update: 2026-01-18 11:03 GMT

கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. அங்கு பஸ் நிறுத்தமும் உள்ளது. அந்த இடத்தில் இருந்து பஸ் ஏற பயணிகள் பலரும் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால், பஸ் ஏற வந்து செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே வேறு இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைத்து, அங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்