ஒண்டிப்புதூர் சுங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பஸ்சில் பயணம் செய்ய திருச்சி சாலைக்கு வர வேண்டி உள்ளது. சுங்கம் பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி சாலை உள்ளதால் தினமும் குறித்த நேரத்துக்கு சென்று குறிப்பிட்ட பஸ்களை பிடிக்க முடியாமல் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். எனவே ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதி வழியாக பஸ் போக்குவரத்தை தொடங்கினால் மிகுந்த பயன் அளிக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?