பொற்றையடியில் இருந்து மயிலாடிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு நர்சரி கார்டன் அமைந்துள்ளது. இந்த நர்சரி கார்டன் அருகில் ஒரு பொக்லைன் எந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக இந்த எந்திரம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பொக்லைன் எந்திரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.