கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள மரங்களில் சில வகைகள் வயது முதிர்ந்து காணப்படுகிறது. இதனால் பலத்த காற்று வீசினாலும் அல்லது அங்கு சுற்றித்திரியும் குரங்குகள் ஏறி மரக்கிளைகளை ஆட்டினாலும் மரக்கிளைகள் துண்டு, துண்டாக முறிந்து சாலையின் குறுக்கே விழுகின்றன. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அப்பகுதியில் சற்று தடுமாறி செல்கின்றனர். எனவே சாலையில் கிடக்கும் மரத்துண்டுகளை போக்குவரத்தை எளிதாக்கும் விதமாக அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.