ஊட்டி ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் இருந்து சேரிங்கிராஸ் செல்லும் சாலையோரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை முடியும் இடத்தில் பாதாள சாக்கடை குறுக்கிடுகிறது. ஆனால் அந்த சாக்கடை திறந்து கிடக்கிறது. இதனால் நடைபாதையில் நடந்து வரும் பொதுமக்கள் சாக்கடையில் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த நடைபாதையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு பாதாள சாக்கடைக்கு மேல் மூடி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.