பெரியநாயக்கன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு பஸ் நிறுத்தத்தில் இருந்து சுகாதார நிலையத்துக்கு சுற்றி வர வேண்டி உள்ளது. பஸ் நிறுத்தத்தின் முன்பகுதியில் சுகாதார நிலையத்தின் பின்பகுதி உள்ளது. அங்கு ஒரு புதிய வழி ஏற்படுத்தினால் நோயாளிகள் வந்து செல்ல எளிதாக இருக்கும். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.