கீரப்பாளையம் அடுத்த முகையூர் கிராமத்தில் பழைய பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டு பல மாதங்கள் ஆகியும் புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்லும் அவலநிலை தொடர்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைந்து பயணிகள் நிழற்குடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.