பஸ் வசதி தேவை

Update: 2025-12-28 14:29 GMT

நாமகிரிப்பேட்டை அருகே உள்ளது வேலம்பாளையம். இந்த கிராமம் தொப்பப்பட்டி, பெருமாகவுண்டம்பாளையம், காக்காவேரி என 3 பஞ்சாயத்திற்கு உட்பட்டது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ்சில் செல்கின்றனர். எனவே ராசிபுரத்தில் இருந்து பிரிவுரோடு, காக்காவேரி வழியாக வேலம்பாளையம் சென்று அங்கிருந்து தொப்பபட்டி, ஜேடர்பாளையம் வழியாக நாமகிரிப்பேட்டை செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி