பஸ் நிலையம் பராமரிக்கப்படுமா?

Update: 2025-12-28 13:50 GMT

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலைய வளாகம் முழுவதும் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பஸ்கள் உள்ளே வரும் போது சிரமமாக உள்ளது. அதே போல கழிவுநீர் கால்வாய் தொட்டியும் சரியாக மூடப்படாமல் உள்ளது.மேலும் திறந்த வெளியில் பலரும் இயற்கை உபாதை கழித்து செல்வதால் பஸ் நிலைய வளாகம் துர்நாற்றம் வீசுகிறது. இதே போல முகப்பு பகுதியில் உள்ள உயர்கோபுர விளக்கும் பெரும்பாலான நாட்களில் எரிவதில்லை. எனவே இந்த பஸ் நிலையத்தை முறையாக பராமரிக்கலாமே!

மேலும் செய்திகள்

பஸ் வசதி