கூடலூரில் இருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் தினமும் இயக்கப்படும் தொலைதூர விரைவு பஸ்கள் வாரத்தில் 2 நாட்கள் வீதம் நடுவழியில் பழுதடைந்து பயணிகளை சிரமத்துக்குள்ளாக்கி வருகிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய பராமரிப்பு இன்றி பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே போக்குவரத்து கழக நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.