நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-12-14 06:39 GMT

நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர், கருங்கல், இருக்கலம்பாடு, தொழிச்சல், கானாவூர் வழியாக மிடாலத்திற்கு தடம் எண் 7/46 அரசு பஸ் ஒரு முறை மட்டும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் சந்தைக்கு செல்வோர் என அனைவரும் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் இருக்கலம்பாடு பகுதி வழியாக இயக்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நலன்கருதி மேற்குறிப்பிட்ட அரசு பஸ்சை நாகர்கோவிலில் இருந்து மிடாலத்திற்கு முழுநேரம் சீராக இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி