கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு சக்கர வாகனங்களை பள்ளி மாணவர்கள் ஓட்டி செல்கிறார்கள். பள்ளி சீருடையிலேயே இரு சக்கர வாகனங்களை அவர்கள் ஆபத்தான முறையில் ஓட்டுகின்றனர். அதே போல சிறுவர்கள் பலரும் இரு சக்கர வாகனங்களின் புகைப்போக்கிகளை மாற்றி அமைத்து அதிக சத்தத்துடன் ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே இரு சக்கர வாகனங்களை ஓட்டும் சிறுவர்களை பிடித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.