ஆபத்தான பயணிகள் நிழற்குடை

Update: 2025-11-30 15:19 GMT

திருச்சி மாவட்டம் காட்டூர் சக்தி நகர் பஸ் நிறுத்தத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிற்குடை தற்போது சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அச்சப்பட்டு நிழற்குடையில் நிற்காமல் வெளியே நின்று செல்கின்றனர். இதனால் மழை மற்றும் வெயிலில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் காணப்படும் பயணிகள் நிழற்குடையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி