கிருஷ்ணகிரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பெங்களூரு சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு காலை முதல் இரவு 8 மணி வரையில் ஓரளவு பஸ் சேவை உள்ளது. இரவுக்கு மேல் பல பஸ்கள் இங்கு நிறுத்துவதில்லை. இதனால் நோயாளிகள் பலரும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். ஆகவே இரவு நேரங்களில் ஓசூர், பெங்களூரு செல்லும் பஸ்களில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகளை இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.