பஸ்கள் வருமா?

Update: 2025-11-23 17:26 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் சுற்று வட்டார பகுதியில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள பொதுமக்கள் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், வேலைக்கும் அரூர் பஸ் நிலையத்திற்கு வந்து தான் செல்ல வேண்டிய உள்ளது. சென்னை, வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகள் வழியாக வரும் பஸ்கள் அரூர் பஸ் நிலையத்திற்குள் வராமல் பைபாஸ் சாலையில் சென்று வருகின்றன. பெரும்பாலான பஸ்கள் ரவுண்டானா பைபாஸ் ரோட்டில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அரூர் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்