கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக சென்று பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறார்கள். குறிப்பாக பழைய இருசக்கர வாகனங்களில் புகைபோக்கி உள்ளிட்டவற்றை மாற்றி, அதிக ஒலி எழுப்பியவாறு செல்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் 18 வயது நிரம்பாத பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். எனவே காவல் துறையினர் இதை கண்காணித்து இந்த இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.