பர்கூரில் வாரச்சந்தை மைதானத்தையொட்டி சாலையோரம் வியாபாரிகள் கடைகள் போட்டு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் காரகுப்பம் சாலையின் இரு புறங்களிலும் இறைச்சி, மீன் வறுவல், பானிபூரி கடைகள் வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சந்தைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தையை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.