அந்தியூர் பேரூராட்சியில் உள்ள தவுட்டுப்பாளையம்- ஆப்பக்கூடல் சாலையில் கடந்த பல ஆண்டுகளாக மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் பூக்கடை கார்னர் பகுதியில் மழைநீா் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே தவுட்டுப்பாளையம்-ஆப்பக்கூடல் சாலையில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.