காந்திபுரத்தில் இருந்து செல்லப்பகவுண்டன்புதூருக்கு 14-இ என்ற எண் கொண்ட அரசு பஸ் காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளை இயக்கப்படுகிறது. அந்த பஸ்சை குப்பனூர் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் காந்திபுரத்தில் இருந்து மாதம்பட்டி, குப்பனூர் வழியாக கரடிமடைக்கு இயங்கி வரும் 35, 35பி, 35சி ஆகிய எண் கொண்ட அரசு பஸ்கள் முறையாக குறித்த நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. இதனால் முதியவர்கள், பெண்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பஸ்களை முறையாக இயக்க வேண்டும். மேலும் அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் அல்லது மினி பஸ்களையாவது இயக்க வேண்டும்.