பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை

Update: 2025-11-02 11:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் நெல்லிக்குப்பம் இணைப்பு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை நீண்ட காலமாக இயங்கி வருகிறது. அதே சாலையில்தான் கல்விநிலையங்கள் பல அமைந்துள்ளன. மாலை நேரங்களில் மாணவ - மாணவிகள் சாலையை கடக்க சிரமம் அடைகிறார்கள். மேலும் சார்- பதிவாளர் அலுவலகமும் அருகிலேயே அமைந்துள்ளது. பிரதான சாலையாகவும் பலதரப்பட்ட பொதுமக்களுக்கும் பயன்படுத்தும் இந்த சாலையில் மதுபிரியர்கள் அங்கும், இங்கும் ஓடும் அவலநிலை நீடிக்கிறது. பொதுமக்களின் வாழ்க்கை முறையை சீரழிப்பதாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்