ஊட்டி அருகே காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு செல்லும் வழி செங்குத்தானது ஆகும். அங்கு செல்ல படிக்கட்டுகள் கொண்ட பழைய நடைபாதையே உள்ளது. அதுவும், பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் தவறி விழுந்து காயமடைகிறார்கள். எனவே அந்த வழியில் உள்ள நடைபாதையை புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.