விருத்தாசலம்- கடலூர் சாலையில் அரசக்குழி கிராமத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்கப்பணிக்காக அகற்றப்பட்டது. இதனால் அங்கு பஸ்சுக்காக சில நேரங்களில் கால்கடுக்க வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.