குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகே பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலகம் பராமரிப்பின்றி இருக்கிறது. நிழலகத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் நிழலகத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடன் நிழலகத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.