நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு தடம் எண் 1, 303 ஆகிய பஸ்கள் இயக்கப்படுகின்றனர். அவை காலை 8 மணிக்கு மேல் சீராக இங்குவதில்லை. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5 மணிக்கு மேல் நாகர்கோவில், களியக்காவிளை ஆகிய பகுதிகளுக்கு செல்ல பஸ்கள் இல்லை. இதனால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று திரும்ப முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தொழிலாளர்கள் நலன்கருதி சீரான பஸ் வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோகநாதன், தெரிசனங்கோப்பு.