திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் ரெயிலில் திண்டுக்கல் வரும் பயணிகளில் பலர் கூடுதல் கட்டணம் செலுத்தி வாடகை வாகனங்களில் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டி இருக்கிறது. எனவே திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.