போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-10-12 10:35 GMT

கோவை மாநகராட்சி 83-வது வார்டுக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் தண்டுமாரியம்மன் கோவில் எதிரே சாலையோரத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் கட்டிட கழிவுகள், போக்குவரத்து தடுப்புகள், இரும்பு குழாய்கள் உள்ளிட்டவற்றை போட்டு வைத்து உள்ளனர். இதனால் அந்த வழிேய போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்