காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம்- மதுரமங்கலம் செல்லும் சாலையின் பண்ணூர் இணைப்புசாலை பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லை. மழைக்காலங்களில் அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், பயணிகள் மழையில் நனைந்தவாறே பஸ்சுக்கு காத்திருக்கும் அவலநிலை இருந்து வருகிறது. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் அனைவருமே சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.