செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம், ராம் நகர் 8-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தானநிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலையில் சிதிலமடைந்து காணப்படும் இந்த மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பருவமழை காலத்திற்கு முன்பாக இந்த மின்கம்பத்தை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.