கோவை காந்திபுரம்-கோவைப்புதூர் வழித்தடத்தில் குனியமுத்தூர் வழியாக 160 சி மற்றும் பேரூர் வழியாக 160 ஆகிய எண் கொண்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் திடீரென கடந்த 2 ஆண்டுகளாக அந்த பஸ்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் ஊழியர்கள் பற்றாக்குறை என்று கூறுகின்றனர். அந்த பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிப்படுகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.