திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் பஸ் நிலையத்தை பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. இதனால் பஸ்கள் சாலைகளிலேயே நிறுத்தி பயணிகளை அழைத்து செல்கிறது. இந்த போக்கினால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேலும் வாகன ஓட்டிகளுக்கிடையே தகராறாக மாறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து சாரிந்த துறை அதிகாரிகள் அங்கு தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி கொடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.